டில்லி : முதல்வரை சந்திக்க தோட்டாவுடன் வந்தவர் கைது

டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க துப்பாக்கி தோட்டவுடன் வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சில தினங்களுக்கு முன்பு டில்லி சட்டபேரவையில் மிளகாய்ப் பொடி வீசி தாக்குதல் நடந்தது. அதற்கு முன்பும் ஒரு முறை டில்லி முதல்வர் மீது தாக்குதல் நடைபெற இருந்தது முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மக்களை முதல்வர் சந்திக்கும் ஜனதா தர்பார் நிகழ்வு டில்லியில் நடந்தது.

இந்த நிகழ்வில் வந்தவர்களை சோத்னை செயது அனுப்புவது வழக்கம். அவ்வாறு நேற்று காலை சுமார் 11.15 மணிக்கு முதல்வரை காண ஒருவர் வந்துள்ளார். அவரை சோதனை இடும் போது அவரிடம் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்தனர்.

அப்போது அவர் பெயர் முகமது இம்ரான் என்பதுமவர் கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு மசூதியின் பொறுப்பாளர் என்பதும் தெரிய வந்தது. டில்லி சீலம்பூரில் வசிக்கும் இம்ரான் ஊதிய விஷயம் குறித்து பேச வந்துள்ளதாக தெரிவித்தார். அவருடன் 12 மசூதி ஊழியர்களும் உடன் வந்துள்ளனர். அந்த தோட்டாக்கள் மசூதியின் நன்கொடை பெட்டியில் இருந்ததாகவும் அதை தனது சட்டைப் பையில் வைத்த பின் அதை மறந்து விட்டு முதல்வரை காண வந்ததாகவும் இம்ரான் தெரிவித்த்ள்ளார்.

இதை நம்பாத காவல்துறையினர் இம்ரானிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டில்லி முதல்வர் கெஜ்ரிவால், “இந்த மூன்று வருடங்களுக்குள் என்னைக் கோல்ல நான்கு முறை முயற்சிகள் நடந்துள்ளன. நான் டில்லி முதல்வ்ராக இல்லை எனில் இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடந்து இருக்காது.
இந்த தாக்குதல் முயற்சிகள் என் மீது நடக்கவில்லை. மாறாக டில்லி மக்கள் மீது நடந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் அமர்த்தியதற்காக பிரதமர் மோடி டில்லி மக்களை இவ்வாறு பழி வாங்க எண்ணி உள்ளார்” என கூறி உள்ளார்.