Random image

மோசடிக்காரரிடம் ரூ.94000 ஏமாந்த சிபிஐ காவலர்

டில்லி

சிபிஐ பிரிவின் காவலரிடம் ஒருவர் ரூ.94000 மோசடி செய்துள்ளார்.

மத்திய புலானய்வுத் துறையில் காவலராக (கான்ஸ்டேபிள்) பணி புரிபவர் லட்சுமி நாராயணன்.    இவர் டில்லியில் லோதி ரோடில் அமைந்துள்ள சிபிஐ அலுவலகத்தில் பணி புரிகிறார்.    இவருக்கு  ஒரு தனியார் வங்கியில் கணக்கு உள்ளது.   அதற்கான செயலியை இவர் தனது மொபைலில் டவுன்லோடு செய்து உபயோகித்து வந்தார்.

திடீரென அவரால் அந்த செயலியின் மூலம் கணக்கை நிர்வகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.  அதை ஒட்டி அவர் அந்த வங்கியின் வாடிக்கையாளர் மைய அதிகாரியை 9572718930 என்னும் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.   அந்த அதிகாரி அவருடைய ஆதார் இணைப்பு அப்டேட் செய்யப்படவில்லை எனக் கூறி அவருடைய வங்கி அட்டை எண், பின் நம்பர் உள்ளிட்ட பல விவரங்களைக்  கேட்டுள்ளார்.

அந்த அதிகாரியை நம்பி லட்சுமி நாராயணன் அனைத்து விவரங்களையும் அளித்துள்ளார்.    சிறிது நேர்த்துக்குள்ளாக அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.94000 எடுக்கப்பட்டுள்ளதாக குறும் தகவல் வந்துள்ளது.   அதிர்ந்து போன லட்சுமி நாராயணன் உடனடியாக தனது அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் அளித்த சிபாரிசின் பேரில் தெற்கு டில்லி காவல்துறை இந்த புகாரை ஏற்று விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறது.   இதுவரை மோசடிக்காரர் பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என தெரிய வந்துள்ளது