ஸ்டாக்ஹோம்:

2011 ஆம் ஆண்டில் மாலி நாட்டின் டிம்பக்டூவில் ஜோஹான் குஸ்டாஃப்சன் ( வயது 42) என்பவரை அல் கொய்தா இயக்கத்தினர் கடத்திச் சென்றனர்.

 

அவரை தற்போது விடுதலை செய்து விட்டனர். இந்த தகவலை ஸ்வீடனின் அயலுறவுத் துறை அமைச்சர் மார்காட் வால்ஸ்த்ரோம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவரை விடுதலைச் செய்ய அந்த இயக்கத்தினர் 5 மில்லியன் டாலர்களை பணயமாக கேட்டதாக ஸ்வீடிஷ் வானொலி தகவலை ஒலிபரப்பியது. ஆனால் அத்தொகை இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டதா? என்பதை வெளியிட வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது.

இவரை மீட்க அமைச்சகம், ஸ்வீடிஷ் மற்றும் அயல்நாட்டு அதிகாரிகள் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டனர் என்று தெரிவித்தார்.