பெங்களூரு: கர்நாடகாவுக்கு வரும் வெளி மாநில நபர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 1,925 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 23,474  ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மகாராஷ்டிரா உள்பட எந்த மாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்கு வரும் நபர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் முகாமில் வைக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசு அறிக்கை ஒன்றை வெளிட்டு உள்ளது.