மயானத்துக்குப் போனவர்களும் மரணித்த சோகம்..

மயானத்துக்குப் போனவர்களும் மரணித்த சோகம்..

மாதிரி படம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தளத்தில்  ராட்சத கிரேன் சரிந்து விழுந்து பலியான  11 பேரில் பாஸ்கரராவ் என்ற டெக்னீஷியனும் ஒருவர்.

பாஸ்கரராவ் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக காரக்பூரில் இருந்து அவரது உறவினர்கள் நேற்று விசாகப்பட்டினத்துக்கு  காரில் சென்றனர்.

அந்த கார் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். பலியானவர்களில், கிரேன் விபத்தில் இறந்த பாஸ்கரராவின் மாமியார் நாகலட்சுமியும் ஒருவர்.

சனிப்பிணம் தனியாகப் போகாது என்று யார் சொன்ன ‘இழவுமொழி’ என்பது தெரியவில்லை. ஆனால் இந்த கிரேன் விபத்து சனிக்கிழமை நிகழ்ந்தது என்பதும், 3 பேர் உயிரைப் பறித்த கார் விபத்து அதற்கு மறுநாள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.

கார்ட்டூன் கேலரி