பெருமாள் மலையில் குவாரிக்கு அனுமதி கிடையாது! மதுரை கலெக்டர்

மதுரை,

துரை பெருமாள் மலையில் குவாரி அமைக்க உரிமம் வழங்கப்பட மாட்டாது மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

அந்த பகுதியில் குவாரி அமைக்க  உசிலம்பட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்பதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்  கூறி உள்ளார். இதுகுறித்த ஏலமும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே குவாரி அமைப்பதை எதிர்த்து ஆட்சியரிடம் உசிலம்பட்டி மக்கள் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் இந்த பொன் பெருமாள் மலை அமைந்து இருக்கிறது. இதை குலசேகரன் கோட்டை என்றும் சொல்கிறார்கள். இந்த மலையில் பெருமாள் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may have missed