பெருந்துறை  அதிமுக வேட்பாளருக்குக் கொரோனா…

ஈரோடு: பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்  பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் காரணமாக தொற்று பரவம் உச்சமடைந்துள்ளது. ஏற்கனவே வேட்பாளர்கள், பிரசாரம் செய்தவர்கள் என பலருக்கு தொற்று உறுதியாகி, சிகிச்சை  பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில்,  ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட  எஸ்.ஜெயக்குமாருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,   பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டபோது, ஜெயக்குமாருக்குக்  கொரோனா தொற்று உறுதி செய்யட்பபட்டு உள்ளது.

இதையடுத்து,  பெருந்துறை அரசு மருத்துவமனையில், ஜெயக்குமார் பத்து நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதால், அடுத்த 10 நாட்களுக்கு நேரிலோ, தொலைபேசியிலோ அவரிடம் பேசுவதைத் தவிர்க்குமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பபட்டு உள்ளனர்.