சென்னை,

ந்தியாவில் நமது உள்நாட்டு காளை மாடுகள் அழிவதற்கு பீட்டா அமைப்பே காரணம் என்று காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை கூறியுள்ளது.

முதன்முதலில் 1980ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் உருவான ‘பீட்டா’  (PETA -People for the Ethical Treatment of Animals) என்ற  தன்னார்வ அமைப்பு விலங்குகளை பாதுகாக்க தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் நோக்கம்,  “விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும் சோதனைகள் நடத்தவும் மகிழ்ச்சி தரவும் எவ்விதத்திலும் துன்புறத்தப்படவும் உண்டானவை இல்லை”

இந்த அமைப்பு இந்தியாவில் 2000ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக தற்போது பூர்வா ஜோஷிபுரா என்பவர் உள்ளார்.

இந்தியாவில் பீட்டா(PETA -People for the Ethical Treatment of Animals) செயல்பட ஆரம்பித்த பின்னர்தான், நம் நாட்டு மாடு மற்றும்  காளை இனங்களின் அழிவு தொடங்கியது என்று காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கார்த்திகேய சேனாபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலங்காலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி, கடந்த சில ஆண்டுகளாக பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து தமிழக அரசு கோர்ட்டில் எதிர்மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. காளைகளை காட்சிபடுத்தும் பொருள் என்ற பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசை தமிழக அரசியல் கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில்  ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடை பெற வேண்டும் என்று இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நம் நாட்டு காளைகள் குறித்து, காங்காயேம்  கால்நடை ஆராய்ச்சி கழக தலைவர் சேனாதிபதி கூறியதாவது,

தற்போதுள்ள நாட்டு இன காளைகளை காப்பாற்றுவதற்க ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் விலங்குகளின்  நலத்தில் அக்கறை கொண்டுள்ளதாக சொல்லும் பீட்டா அமைப்பு திட்ட மிட்டு தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மாடுகளை கொண்டு நடத்தப்படும் போட்டிகளை தடை செய்து வருகிறது. இதன் காரணமாக  நாட்டு ரக காளை  காளை இனங்கள்  அழிந்து வருகின்றன.

இந்த பீட்டா அமைப்பின் காரணமாக காலங்காலமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்த ரேக்ளா பந்தயங்கள், கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகாவில் நடத்தப்பட்ட கம்பாலா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலும் ரேக்ளா போட்டிகள்  தடுக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் 1970ம் ஆண்டு  வெண்மைப் புரட்சி என்று பல்வேறு வெளிநாட்டு ரக மாடுகளை அறிமுகப்படுத்தியது. அப்போது கூட நாட்டு காளை, மாடு இனங்கள் காணாமல் போகவில்லை.

இந்தியாவில்  பீட்டா அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு, அது நமது நாட்டின்  பாரம்பரிய விளையாட்டுகளில் தலையிட தொடங்கியது. அதன் பிறகுதான் நம் நாட்டு காளை, மாடு இனங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன என்று குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு உடனடியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அதன் மூலம் பீட்டா போன்ற அமைப்புகள் தலையிடுவதை தடுக்க வேண்டும் என்றார். ஜல்லிக்கட்டுப் போட்டியை தடை செய்து நியாயமல்ல என்றார்.

இதுகுறித்து சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது,

”வெண்மை புரட்சி, நவீன இயந்திரங்களின் வருகை என பல காரணிங்களே  மக்கள் விவசாயத்தில்  இருந்து பெரிய எண்ணிக்கையில்  வெளியேறியதற்கு காரணமாக இருந்தது.

இன்றளவும் கிராமங்களில் மக்கள் கலாசார ரீதியாக நாட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.  ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளை தடை செய்தால், நாம் பாரம்பரிய ரக காளைகளை, மாடுகளை இழக்க நேரிடும் என்றார்.