இயக்குநராக அறிமுகமாகும் பீட்டர் ஹெய்ன்….!

‘மின்னலே’ படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநராக அறிமுகமானவர் பீட்டர் ஹெய்ன்.

இந்தியத் திரையுலகில் தயாராகும் பல பிரம்மாண்டமான படங்களின் சண்டைக் காட்சிகள் இவரது மேற்பார்வையில் தான் உருவாகி வருகிறது.

பல்வேறு படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குநராக பணிபுரிந்த இவர் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.