வனிதாவை மணந்த பீட்டர் பால் மீது மகன் கடுமையான குற்றச்சாட்டு.. குடி மறக்கும் மையத்திலிருந்து தப்பிவந்தவர்..

மாணிக்கம். சந்திரலேகா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் வனிதா. இவருக்கும் பீட்டர் பால் என்பவருக் கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. வனிதா ஏற்காவே 2 முறை திருமணம் செய்து விவாவகரத்து செய்தவர் என்பது தெரிந்த விஷயம் என்றாலும் பீட்டர் பால் செய்வது தனது 2வது திருமணம் என்பதை வெளிப்படுத்தமல் மறைத் திருந்தார்.
சமீபத்தில் பீட்டர் பால், வனிதா திருமணம் நடந்தது. அதன்பிறகு பீட்டர் பால் மனைவி எலிசெபெத் ஹெலன் என்பவர் போலீஸில் புகார் அளித்த பிறகுதான் பீட்டர்பால் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவருக்கு பிள்ளைகள் இருக்கின்றனர் என்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில் பீட்டர் பால் பற்றி வனிதா கூறும்போது மது உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாத டீட்டோட்லர் என்று நற்சான்று கொடுத்தார். அதைக்கேட்டு தற்போது பீட்டர் பாலின் மகன் பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார்.


‘என் தந்தை மதுவுக்கு அடிமையானவர், பல பெண்களுடன் அவருக்கு பழக்கம் உண்டு. மதுவுக்கு அடிமையாக இருந்த அவரை மது அடிமைகள் மீட்பு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தோம். ஆனால் அங்கிருந்தவர்களை ஏமாற்றி விட்டு காம்வபுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி வந்தார்.
வனிதா வீட்டுக்கு என்னை ஒருமுறை அழைத்துச் சென்றிருக்கிறார். அபோது வனிதா மகளும் நானும் அண்ணன் தங்கைபோல் பழகினோம். ஆனால் வனிதவை திருமணம் செய்யவிருப்பது பற்றி எங்களிடம் சொல்லவில்லை. இருவரின் திருமண பத்திரிகை நெட்டில் வெளியானபோது கூட அது பொய்யான தகவல் என்றுதான் எனது தந்தை கூறினார். அவர் எனது அம்மா வின் நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டார். பின்னர் தெரிந்தவர் களிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டுக்கொண்டிருந்தார்.
இவ்வாறு பல்வேறு புகார்களை தந்தை பீட்டர் பால் மீது அவரது மகன் தெரிவித்திருக்கிறார்.