மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் நடிகை வனிதாவின் திருமணம்….!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.

இவருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இது அவருக்கு மூன்றாவது திருமணம் .

இந்நிலையில் நடிகை வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது அவரது மனைவி வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முறையாக விவாகரத்து பெறமால் பீட்டர் பால், வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக அவரது மனைவி எலிசபெத்த ஹெலன் வடபழனி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

முறையாக விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.