பொதுப்பாதுகாப்பு சட்டத்தில் ஓமர் அப்துல்லா கைது எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு!

டெல்லி:

ம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து,  உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அஸ்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி மத்திய பாஜக  நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது.  அதைத்தொடர்ந்து, காங்ஷமீர் முன்னாள் முதல்வர்கள், முக்கிய அரசியல் வாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட சிலர் பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வீட்டு சிறைக்குள் அடைப்பட்டுள்ள நிலையில், கடந்த 7ந்தேதி ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் மீதும்  பொதுப்பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.

இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்புபு கிளப்பி உள்ளது. அரசியல் கட்சிகள் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சட்டத்தில் ஓமர் அப்துல்லா கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்துள்ளார். சாரா பைலட், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் துணைமுதல்வர் சச்சின் பைலடின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 370 ரத்து, Article 370, Former J&K Chief Minister, Omar Abdullah, Public Safety Act (PSA), supreme court, under, உச்சநீதி மன்றம், காஷ்மீர், சிறப்பு அந்தஸ்து ரத்து, பொதுபாதுகாப்பு சட்டம், முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, மெகபூபா முக்தி
-=-