வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க வேண்டும்: சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல்

--

சென்னை: வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத்தலங்களை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்த கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு திங்களன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் தமது வழக்கறிஞர் எம்.எல். ரவி மூலம் இந்த வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுபானக் கடைகளைத் திறக்க அரசாங்கம் முடிவு எடுத்த நிலையில் மத வழிபாட்டுத்தலங்களை மூடி வைப்பதில் எந்த தர்க்கமும் இல்லை என்று வாதிட்டார். லாக்டவுன் காலத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புனித ரமலான் நோன்பு நேரத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டுள்ளார்.