ஜக்கி வாசுதவ்
ஒவ்வொரு ஆண்டும், குடியரசு நாளில் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

அதனைப் பெரிதும் செல்வாக்கு, பரிந்துரை அழுத்தம் காரணமாகவே பலர் பெறுகிறார்கள் – தகுதி என்பதோ தேடிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்!

மிகப் பிரபலமான நோபல் பரிசு தேர்வு முறை – குழுகூட இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பதற்குப் பிரபல அமெரிக்கப் புதின எழுத்தாளரான இர்விங் வேலஸ் அவர்கள் எழுதிய தி பிரைஸ்( The Prize) என்ற புதினம் இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, துலாக்கோலைப் பிடித்து, சல்லடை போட்டு ஆராய்ந்து வழங்கப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு பத்ம விருதுக்குத் தேர்வாகியுள்ள – ஒரு விந்தையாளரான ஜக்கி வாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியார் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உயரிய விருதான பத்ம விபூஷன் எவ்வகையில் அவர் அதற்குத் தகுதி உள்ளதென பலரும் புருவத்தை உயர்த்தினர்.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை நமது பத்திரிக்கை.காமில் வெளியிட்டுள்ளோம்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜக்கி வாசுதேவ் கொடுக்கப்பட்ட பத்ம விபூஷன் பட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் தாக்கல் செய்த மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம்.

மத்திய உள்துறை அமைச்சகம் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்துள்ளது.  பூவுலகின் சார்பில் வாதிட்ட வெற்றிச்செல்வன்,
ஜக்கி மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஜக்கி சட்டத்தை மதிக்கிற நபர் அல்ல என்று நிரூபிக்கும், ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா விற்கு முறைகேடான கட்டிடத்தை இடிக்கும்படி DTCP-யால் வழங்கப்பட்ட அறிவிப்பிற்கு அவர் பணியவில்லை இல்லை என்பதை மேற்கோள்காட்டினர்.

ஜக்கிக்கு வழங்கப் பட்ட பத்ம விபூஷன் திரும்பப் பெறப்படும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.