பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி.க்குள் கொண்டு வர வேண்டும்…ப.சிதம்பரம்

டில்லி:

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் அதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தைத் எட்டியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 9-வது நாளாக உயர்த்தியுள்ளன. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல. அதிகப்படியான வரிகளால் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவிடும். இவற்றை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.