மும்பை

க்களவை தேர்தல் முடிந்த அடுத்த நாளே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தேர்தல்கள் நடைபெறும் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித ஏற்றமும் காணப்படுவது இல்லை.   இது முன்பு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பின்பற்றப்பட்டது.  தற்போது மக்களவை தேர்தல் நேரத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்துள்ளது.

இது குறித்து அரசு எண்ணெய் நிறுவனமான எச் பி சி எல் நிறுவன அதிகாரி ஒருவர், “உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.   தேர்தல் நேரத்தில் இந்த விலையில் மாற்றம் கூடாது என எந்த அரசு உத்தரவும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளர்.

கடந்த ஏப்ரல் மாதம் 11 முதல் மே மாதம் 19 வரை மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏழு கட்டமாக நடந்தன.   இந்த கால கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.   ஆயினும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த ஞாயிறு அதாவது மே 19 வரை உயராத பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று மீண்டும் உயர்ந்துள்ளது.   நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 8 முதல் 10 பைசா வரையில் உயர்ந்துள்ளது.   இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த விலை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.