இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு

டில்லி:

ர்வதேச சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதால், நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகளும் உயர்ந்து வருகிறது. தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.91 ஆக உயர்ந்துள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ. 69.46 ஆக உள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு  தலைநகர் டில்லியில் 13 மற்றும் 14 பைசா உயர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 77.91 ரூபாயாக அதிகரித்துள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ. 69.46 ஆக உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு  ஜூன் 15 ம் தேதி முதல், ஒவ்வொரு மாதமும் 1ந்தேதி மற்றும் 16ந்தேதி எண்ணை நிறுவனங்களின் விலை நிர்ணயிம் குறித்த முறை ரத்து செய்யப்பட்டு, தினசரி விலை நிர்ணயம் அமல்படுத் தப்பட்டது. இதன் காரணமாக கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறையும் என மத்தியஅரசும், எண்ணை நிறுவனங்களும் கூறின.

ஆனால்,  சர்வதேச சந்தையும் கச்சா எண்ணை குறைந்ததாலும், பெட்ரோல் டீசல் விலை குறையாமல் அதிகரித்தே வருகிறது.  கடந்த மே 29ந்தேதி முதல்  இதுவரையில் இல்லாத அளவில் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 16ந்தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 70.32 ஆக  குறைந்ததை தொடர்ந்து,  பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. ரூபாயின் வீழ்ச்சி, இந்த எரிபொருளின் விலைகளை பாதித்து வருகிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.77 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 0.74 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மும்பையில்,  இன்று பெட்ரோல் விலை13பைசா அதிகரித்து ரூ. 85.33, 13 பைசாவாக உள்ளது. அதுபோல. டீசல் விலை லிட்டருக்கு 73.74 ரூபாயாக இருந்தது. கடந் சனிக்கிழமை பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ. 78.43-க்கும், மும்பையில் 86.24 ரூபாயாகவும் இருந்த நிலையில் இன்று விலை மேலும் உயர்ந்துள்ளது.

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80.84 ரூபாயாக இருந்தது. டீசல் விலை லிட்டருக்கு 72.31 ரூபாயாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு பைசாவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 80.80-ல் இருந்து ரூ. 80.94-க்கு விற்பனையானது. டீசல் விலை 73.23 ரூபாயிலிருந்து 73.38 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: after the rupees depreciation, Petrol and diesel prices continue to hike, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-=-