தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு : கலக்கத்தில் பொது மக்கள்

சென்னை

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளன.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றபடி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினம் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இது பொது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.

இன்று சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் கூடி உள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.80 ஆக உள்ளது.

டீசல் விலையும் லிட்டருக்கு 7 காசுகள் உயர்ந்துள்ளது. இன்று சென்னயில் ஒரு லிட்டர் டீசல் ரூ.70.32 க்கு விற்கப்படுகிறது.