பெட்ரோல் டீசல் விலை இன்று மீண்டும் கடும் உயர்வு
சென்னை
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.62 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ.75.61 ஆகவும் உயர்ந்துள்ளது.
தற்போது நாடெங்கும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தினந்தோறும் விலையை மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை ஒட்டி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
கர்நாடகா சட்டப்பேர்வை தேர்தல் நேரத்தில் சுமார் 19 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிந்த பிற்கு மீண்டும் மள மள வென விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல் விலை ரூ.80 ஐ எட்டிய போது நாடெங்கும் எதிர்ப்பு எழுந்தது. அதன் பிறகும் சிறிது சிறிதாக விலை ஏற்றம் தொடர்ந்துக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று விலை ஏற்றப்படாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.92 க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.74.77க்கும் விற்கப்பட்டது. இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. இன்றைய பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ.82.62 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.61 ஆகவும் ஆகி உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.