பெட்ரோல், டீசல் விலை முறையே 21, 15 காசுகள் குறைவு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில் முறையே 21,15 காசுகள் குறைந்துல்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.  இதன்படி, பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா கணக்கில் உயர்த்தப்பட்டு வந்தது.   சில நேரங்களில் குறைக்கப்பட்டும் வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களில்   அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது , கச்சா எண்ணைய் விலை உயர்ந்தது  உள்ளிட்ட காரணங்கலால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்நிலையில், கடந்த இருவாரமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.  சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைக்கப்பட்டு 82 ரூபாய் 65 காசுகளுக்கும் . டீசல் விலை லிட்டருக்கு 08 காசுகள் குறைக்கப்பட்டு 78 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 13 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 45 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 4 காசுகளும் குறைக்கப்பட்டிருக்கிறது.