தூத்துக்குடி: காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

 

 

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராடி வருகிறார்கள். நூறு நாள் போராட்டத்தை அறிவித்த அவர்கள் நூறாவது நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது கலவரம் மூண்டது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பத்து பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடந்தார்கள்.

பலியானவர்களின் உடல் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் இறந்தவர்களின் உறவினர்கள், பிரேதபரிசோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனை முன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறையினர் மீது மக்களில் சிலர், கற்களை வீசினர். இதையடுத்து காவல்துறையினர்  அவர்களை தடியடி நடத்தி கலைக்க முயற்சித்தனர்.

அப்போது போராட்டக்காரர்களில் சிலர், போலீசார் மீது பெட்ரோல் குண்டை வீசினர். அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.