தூத்துக்குடி அருகே காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மீண்டும் பதற்றம்?

தூத்துக்குடி:

தூத்துக்குடியி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  காவல்நிலையம் மீது இன்று அதிகாரை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதன் காரணமாக அமைதி ஏற்பட்டு வரும்  தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை துப்பாக்கி சூட்டை தொடர்ந்து,  4 நாட்களுக்குப் பிறகு சற்று அமைதி திரும்பி வருகிறது. இந்த நிலையில், நேற்று தூத்துக்குடிக்கு வெளியே கருங்குளம் பகுதியில்  ஒரு பஸ்சுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இன்று  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த குளத்தூர் காவல் நிலையம் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. பேருந்து போக்குவரத்தும் தொடங்கி உள்ளது.