பெட்ரோல் பங்குகள் இனி இரவு 10 மணி வரை இயங்க அனுமதி…! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பல்வேறு தொழில்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்ட நிலையில், தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் தளர்வுகள் காரணமாக, பெரும்பாலான தொழில்கள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை இரவு 8 மணி வரை மட்டுமே இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள், விற்பனை நேரத்தை மேலும்  அதிகரித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி,  இனிமேல் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 10மணி வரை செயல்பட லாம் என தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.