பெட்ரோல், டீசல் தொடர் விலை உயர்வு: மாநகர பேருந்து சீசன் கட்டணம் உயர்வு?

சென்னை:

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மாநகர பேருந்து சீசன் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும்  போக்குவரத்து துறை தற்போது உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வரால், கடுமையான பொருளாதார பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இதன் காரணமாக  பேருந்து சீசன் டிக்கெட் விலை  அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வருமானம் வரவில்லை. கட்டண உயர்வுக்கு பின்பு பேருந்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்தது.

ஆனால், மாதாந்திர சீசன் கட்டணம் வாயிலாக பயணம் செய்வோர் எண்ணிக்கை மட்டுமே உயர்ந்துள்ளது. தற்போது, மாநிலம் முழுவதும் 1லட்சத்துக்கு 20ஆயிரம் பேர்    மாதந்திர சீசன்  டிக்கெட் வாயிலாக பயணம் செய்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தினசரி வசூல் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,   மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கிறது. வருவாய் இழப்பை டுசெய்யும் வகையில், மாதாந்திர பேருந்து கட்டணம் ரூ.1000ல் இருந்து ரூ.1,300ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாதாந்திர பஸ்கட்டணத்தை அரசு உயர்த்தினால், அதை பயன்படுத்தி வரும் 1,20,000 பேர் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.