Random image

உச்சத்தை நோக்கி பெட்ரோல் டீசல் விலை….! பொதுமக்கள் செய்வதறியாது தவிப்பு

சென்னை:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது.  சென்னை யில் இன்றைய  பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிறது  குறிப்பாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இதுகுறித்தோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தோ நாட்டின் பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ பதில் தெரிவிக்காமல் தொடர் மவுனம் சாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை;-

சென்னை     – ₹ 85.48
டெல்லி     –  ₹ 82.22
மும்பை     –  ₹ 89.60
 டீசல் விலை;-
சென்னை     – ₹ 78.10
டெல்லி     – ₹ 73.87
மும்பை     – ₹ 78.42

You may have missed