நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

டெல்லி:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.29 உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 0.97 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை மாதந்தோறும் முறையே 1-ம் தேதியும், 16-ம் தேதியும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது சிறிது அதிகரித்திருப்பதால், அதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை உயர்வு மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.29 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கார்ட்டூன் கேலரி