எகிறும் பெட்ரோல், டீசல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்…

சென்னை:

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வார் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.85.99 என்ற அளவிலும், டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.26 ஆகவும் விற்பனையாகிறது. இதனால்  வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்த கச்சா எண்ணையின் விலையின் பொறுத்து அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்ற முறையை தொடர்ந்து,  ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வு விரைவில் செஞ்சுரியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இதை அரசுகள் கண்டுகொள்ளாமல், ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம்சாடடி வருகின்றனர். வரவலாறு காணாத இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே கடுமையான மன உளைச்சலையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல் விலை:

சென்னை – ₹ 85.99

டெல்லி     – ₹ 82.61

மும்பை     –  ₹ 89.97

கொல்கத்தா – ₹ 84.44

டீசல் விலை;-

சென்னை     – ₹ 78.26

டெல்லி     – ₹ 73.97

மும்பை     – ₹ 78.53

கொல்கத்தா –  ₹ 75.82

இப்படியே போனால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.100யைத் தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை/