Random image

விரைவில் ‘செஞ்சுரி’ போடும் பெட்ரோல் டீசல் விலை: சென்னையில் ரூ.85,.31 மகராஷ்டிராவில் ரூ.91.28

டில்லி:

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து வருகிறது. விரைவில் செஞ்சுரி போட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையான துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85ஐ தாண்டியது. அதேவேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.91.28ம், டீசல் விலை ரூ. 79.13 ஆகவும் உள்ளது.

எண்ணெய் நிறுவனங்களே தினமும் விலை செய்ய என்று மத்திய அரசு அனுமதி அளித்ததோ அன்று முதல் நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்தே வருகின்றன. இதை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், மத்திய அரசு அதில் தலையிட மறுத்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் சென்றுகொண்டிருக்கிறது.

எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலை உயர்த்தி வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் 15 காசுகள் என விற்பனை ஆனது. இன்று பெட்ரோல் விலை ரூ.85.31 காசாக உயர்ந்து உள்ளது. அதுபோல டீசல் விலை 77.94 பைசாவாக நேற்று இருந்த நிலையில் இன்று ரூ.78 ஆக உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது மக்களிடையே அதிருப்தியை உருவாகி உள்ளது.