டில்லி:

வுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை மீது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில்அதிகளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியா. அங்கு நாள் ஒன்றிற்கு உலகின் மற்ற நாடுகளுக்கு சவுதி 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது
மொத்த எண்ணெய் வள நாடுகளில் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு. சவுதியிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமது செய்வதில் இந்தியாவும் ஒன்று.

இங்கு  புக்கியாக் நகரில் இருக்கும் அரம்கோ நிறுவனத்தின் (Aramco refinery ) அப்குயிக் (Abqaiq) ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயலிலும் ஆளில்லா விமானம் மூலம் பயங்கரவாதிகளால் கடந்த 14ம் தேதி ச தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக அங்குஎண்ணெய் உற்பத்தி துறை பெரிதும் பாதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிவரும் வேளையில், சர்வதேச அரங்கில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை நிறைந்த இந்தியாவிலும் அதன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, சவுதியில் கச்சா எண்ணெயின் உற்பத்தி பாதியாக குறைந்த விட்ட நிலையில், கச்சா எண்ணெயின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூபாய் 5 முதல் 6 வரை விலை உயரக்கூடும் என்று இந்திய விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், தாக்குதலுக்கு உள்ளான அராம்கோ நிறுவனம், இதனால் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணெயில் ஏதும் பாதிப்பு இருக்காது என்று உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.