மீண்டும் தொடர்ந்து ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலை…!

சென்னை:

மிழகத்தில்  பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.81.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு ஜெட் வேகத்தில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மே மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் காரணமாக சுமார் 1 மாத காலம் பெட்ரோல் டீசல் விலை மாற்றமில்லாமல் இருந்த நிலையில், கர்நாடக தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்தன.

இந்த நிலையில், இடையில் சில காலம் பெட்ரோல் டீசல் விலைகள் 78 ரூபாயில் இருந்து 80 ரூபாய்க்குள் இருந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் உயர்ந்து வருகிறது.

சென்னையில்இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.81.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது…!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதாலும், அமெரிக்க டாலர்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்று தொடர்ந்து 5–வது நாளாக விலை அதிகரித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.81.58 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 74.18 ஆகவும் உள்ளது.

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகளும் விற்பனை செய்யபடுகிறது.