சென்னை:

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.

நாடு முழுவதும்  பெட்ரோல், டீசல் விலை தினரிச நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது முதல், விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப விலைகளை முடிவு செய்து வருகின்றன. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சமீப நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இடையில் சில நாட்கள்  பெட்ரோல் டீசல் குறைந்திருந்த நிலையில், சமீப நாட்களாக விலையானது ஏற்றம் கண்டுவருகறது.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.70ஆக விற்கப்படுகிறது. அதுபோல நாட்டின் பல்வேறு பகுதிகளில் 15, 16 பைசா வரை லிட்டருக்கு உயர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று 74.68 பைசாவுக்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.74.74 ஆக அதிகர்த்து உள்ளது. அதுபோல டீசல் விலைரூ.67.09ல் இருந்து 67.24 ஆக உயர்ந்து உள்ளது.

கொல்கத்தாவில், இன்றைய பெட்ரோல் விலை ரூ.77.40 ஆகவும், சென்னையில் ரூ.77.70 ஆகவும், மும்பையில் ரூ.80.40 ஆக உள்ளது.

அதுபோல இன்றைய டீசல் விலை கொல்கத்தாவில் ரூ.69.66 ஆகவும், சென்னையில் ரூ.71.09 ஆகவும், மும்பையில் ரூ.70.55 ஆகவும்  உள்ளது.