சென்னை:

மிழகத்தில்  பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.  இன்று 5வது நாளாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கச்சா எண்ணைய் சர்வதேச விலையை பொறுத்து இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு  ஆறுதலை அறித்தது. ஆனால், தற்போது பண்டிகை காலமான பொங்கல் சமயத்தில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

கடந்த 5 நாட்களாக விலை தொடர்ந்து உயந்துள்ளது. சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.79 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.78 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.72.79 ஆகவும்,  டீசல், நேற்றைய விலையில் இருந்து 53 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 67.78 ஆகவும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்ந்துள்ளதால், விலை ஏறி வருவதாக எண்ணய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.