விலையேற்றத்தால் பெட்ரோல் விற்பனை சரிவு: பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி!

டுமையான விலையேற்றம் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை 20 சதவீதம் சரிவடைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பா.ஜ.க.வினர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகிறார்கள்.

தமிழகத்தில் க;டந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 6 ஆயிரத்து 847 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த வருடத்தைவிட 10 முதல் 14 சதவீதம் அதிகம்.  தமிழகத்தில் தினமும் 3 கோடியே 22 லட்சம் லிட்டர் அளவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் விலை உயர்வு காரணமாக கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களில் கணிசமானவர்கள்  நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆகவே அவர்களில் பலர் விலை உயர்வுக்கு பிறகு  பொதுப்போக்குவரத்தை (பேருந்து, ரயில்)  பயன்படுத்த தொடங்கிவிட்டதாகவும் இதன் காரணமாகவே பெட்ரோல் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பா.ஜ.க.வினர் பலர், “பெட்ரோல் விற்பனை சரிந்துள்ளது மகிழ்ச்சியே. இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது” என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அப்படி பதிவு செய்தவர்களில் ஒருவரான பா.ஜ.க. பிரமுகர் திருப்பதி நாராயணனின் முகநூல் பதிவு கீழே: