Random image

விரைவில் பெட்ரோல் விலையும் டாலர் மதிப்பும் 100 ரூபாய் ஆகும் : சந்திரபாபு நாயுடு

மராவதி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகி டாலர் மதிப்பும் ரூ. 100 ஆகும் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா அரசின் பொருளாதார தடை காரணமாக துருக்கி நாட்டின் லிரா மதிப்பு மிகவும் சரிந்தது.   அத்துடன் கச்சா எண்ணெய் விலையும் மிக உயர்ந்து தட்டுப்பாடும் உண்டாகி உள்ளது.   இந்த இரண்டும் ஆசிய நாடுகளில் பணமதிப்பை பாதித்துள்ளது.   குறிப்பாக இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.   அதே போல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “இந்தியாவில் தற்போது பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அதற்கு பாஜக அரசுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.   உண்மையில் பொருளாதார வளர்ச்சி மிக மிக குறைவாக உள்ளது.   அந்த வளர்ச்சியும் மக்களால் உண்டானது.  பாஜகவால் அல்ல.    சாதாரண மக்களுக்கு துன்பம் அளித்ததே பாஜகவின் சாதனை ஆகும்.

பாஜக கொண்டு வந்த பணமதிப்பிழப்பு திட்டம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது.  அதனால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.   தற்போது பெட்ரோல் விலை உயர்வதைப் போலவே டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது.

விரைவில் பெட்ரோல் விலை மேலும் அதிகரித்து லிட்டருக்கு ரூ.100 என ஆக வாய்ப்புள்ளது.  அத்துடன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் ரூ. 100 ஆகி விடும்.  இவை அனைத்தும் திறமையற்ற பாஜக அரசால் நிகழ உள்ளது.” என கூறி உள்ளார்.