புதுச்சேரியில் வாட் வரி 2 சதவீதம் குறைப்பு எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை ரூ.1.40 குறைகிறது

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைகிறது.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. விலை அதிகரிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதோடு, தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில்,  குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவரும் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வாட் வரியை 2 சதவீதம் குறைத்து, அம்மாநில துணை நிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை சௌந்திர ரராஜன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைகிறது.