சட்டப்பேரவை தேர்தல்களும் பெட்ரோல் விலையும்

சென்னை

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய அடுத்த தினமே பெட்ரோல் மற்றும் டிசல் விலை உயர்ந்துள்ளது.

சுமார் இரு மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் தொடர்ந்து உயர்ந்து புதிய வரலாறுகளை படைத்தன. மக்கள் இதனால் கடும் துயருற்றனர். அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆயினும் ஒரு சாரார் இந்த விலை குறைப்பு 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர். ஆனால் பாஜகவினர் இதை மறுத்து வந்தனர். அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும் போது பாஜக அரசை குறை சொல்பவர்கள் விலை குறையும் போது அதை கண்டுக் கொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

நேற்று 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. உடனடியாக இன்று பெட்ரோல் விலையில் 12 பைசா உயர்ந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் சமயத்தில் மாறுதல் இல்லாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தல் முடிந்ததும் உயர்ந்தது. தற்போதும் இதே நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Assembly election, petrol price hike
-=-