மும்பை : பெட்ரோல் விலை ரூ. 90 ஐ நெருங்கியது.

மும்பை

மும்பையில் இன்று பெட்ரோல் விலை ரூ.89.69 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினம் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உரிமை அளித்ததில் இருந்து தினமும் விலை உயர்வு ஏற்படுவதால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.   இன்று பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இன்று டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.32 ஆகவும் மும்பையில் ரூ.89.69 ஆகவும் சென்னையில் ரூ.85.48 ஆகவும் கொல்கத்தாவில் ரூ.84.07 ஆகவும் உயர்ந்தது.   இந்த விலை உயர்வு டில்லி, மும்பை கொல்கத்தா நகரங்களை விட சென்னையில் அதிகம் இருந்தது.

இந்த வருடத் தொடக்கத்தில் பெட்ரோல் விலை டில்லியில் லிட்டருக்கு ரூ.69.97 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.