பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசு… , டீசல் 10 காசு குறைப்பு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் விலை 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்தபடி இருந்தன. பத்து நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும்  அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து  பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால், விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. இதையடுத்து  இந்திய எண்ணை நிறுவனங்கள்  இந்த மாத தொடக்கத்திலிருந்தே தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன.

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து ரூ.78.40 ஆகவும், டீசல் விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.71.12 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.