மகாராடிராஷ்டிரா: ராஜ்தாக்கரே பிறந்தநாளுக்கு பெட்ரோல் விலை ரூ. 9 குறைப்பு


ராஜ் தாக்கரே பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.9 வரை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.

மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக இருக்கிறார் ராஜ் தாக்கரே. இன்று அவருக்கு 50 வது பிறந்தநாள். இந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாட விரும்பினார்.

இதனால் மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலையில் 4 ரூபாய் முதல் 9 ரூபாய் வரையில் குறைத்து விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் மகாராஷ்ட்ரா மக்கள், பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று, வாகனங்களுக்கு பெட்ரோல் வாங்கிச் சென்றனர்.