பெட்ரோல் விலை ரூ.100: ஒடிசாவில் பெட்ரோல் பங்கை சூறையாடிய பொதுமக்கள்

புவனேஸ்வர்:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொது மக்களிடையே கடும் கோபத்தையும், மத்திய மாநிலஅரசுகள் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.100 என விற்பனை செய்த, பெட்ரோல் பங்கை அங்கு பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை மாற்றும் வகையில் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, தொடக்கத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை விலை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. பின்னர் தினசரி விலையை நிர்ணயித்து  எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தியே வருகின்றன.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் மத்திய மாநிலஅரசுகள் கண்டுகொள்ளாமல் உள்ளன.

இதன் காரணமாக பெட்ரோல் விலை ரூ.100 தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை 87.05 பாசாவாக  விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு மக்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்   ஒடிசா மாநிலம் பூரியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு விற்கபட்டு வந்தது.  இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  அந்த பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து காவல்துறையில் பெட்ரோல் பங்க் நிர்வாகம் சார்பில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக, முதன்முதலாக ஒடிசாவில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.  பொதுமக்கள் களத்தில் இறங்கி அதிரடியாக பெட்ரோல் பங்கை சூறையாடி உள்ளனர்.

இந்த அதிரடி போராட்டம் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.