டிசம்பரில் ரஜினியின் ‘பேட்ட’ இசை வெளியீட்டு விழா 

டிசம்பர் மாதம் ரஜினியின் பேட்ட படத்தின்  இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி  பேட்ட  படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெறும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்கள்.

மேலும் டிசம்பர் 3 ஆம் தேதி அன்று முதலவாவது பாடலும், 7 ஆம் தேதி இரண்டாவது பாடலும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#petta #audiolanuch #december-