பேட்ட படத்தின் தணிக்கைச் சான்றிதழ்: சன் பிக்சர்ஸ் வெளியீடு

சென்னை:

பொங்கலுக்கு வெளியாக உள்ள ரஜினியின் பேட்ட படத்தின் தணிக்கை சான்றிதழை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, சசிகுமார் உள்பட அவருக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள் நிலையில், தற்போது பேட்ட படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதைபடக்குழு வெளியிட்டுள்ளது.

பேட்ட படத்தின் டீசருக்கு ரஜினி ரசிகர்களிடையே மட்டுமின்றி விஜய்சேதுபதி, சசிகுமார் ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெறும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கார்ட்டூன் கேலரி