பட விமர்சனம்: ‘பேட்ட’ பழைய ரஜினியை ரசிக்கலாம்…..

ல்லுரி வார்டனாக வேலைக்கு வரும் ரஜினி, அந்த கல்லூரியில் படித்து வரும் பாபி சிம்ஹா, கல்லூரி ஜுனியர்களை ராக் செய்வதும், அனைவரையும் மிரட்டி கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அடாவடி செய்வதையும் கவனிக்கிறார்.

பாபி சிம்ஹாவை அடக்கி கல்லூரி மாணவர்களிடையே பெயர் பெறும் ரஜினி மீது பாபி சிம்ஹா   அவரை பழிவாங்க காத்திருக்கிறார்.  இதற்கிடையில், அதே கல்லூரியில் படித்து வரும் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் காதல் வலையில் விழ அவர்களுக்கு ரஜினிகாந்த்,  உதவி செய்கிறார்.

இதற்கிடையே ரஜினியை கொல்ல பாபி சிம்ஹா ஆட்கள் ஏற்பாடு செய்ய… அதே சமயத்தில்  நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல ஹாஸ்டலுக்குள் வர  அவர்களிடம் இருந்து ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றுகிறார்.

படத்தில் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும்  விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள் மாஸ்… இவ்வாறாக விறுவிறுவென செல்லும் படத்தின்கதை, பின்பாதியில் தொய்வு ஏற்டுகிறது.

‘ஹாஸ்டல் வார்டனாகவும், மதுரையில்  பேட்ட  ரவுடியாகவும், இரண்டு அவதாரங்களை எடுத்துள்ளார் ரஜனிகாந்த்.  வார்டனாக வருவதற்கு முன்பு ரஜினியின் பின்னணி என்ன? நவவாசசுதீன் கொலை செய்ய நினைக்கும் சனத் ரெட்டி யார்?  என்பது குறித்து விளக்குவதே கதையின் அம்சம்..இது வழக்கமான பழிவாங்கும் கதை.

சமீபத்தில் வெளியான காலா, கபாலி படங்களை விட சற்று வித்தியாச மானதே பேட்ட. இந்த படத்தில் ரஜினியின் பழைய கெட்டப்பை காண முடிகிறது.  கிராமத்து கெட்-அப், இளமையான தோற்றம் என மாஸ் காட்டிச் செல்கிறார்.

படத்தில் ரஜினியின்  அதிரடியான, ஸ்டைலான, குறும்புத்தனமான நடிப்பு அனைவரையும் ரசிக்க வைக்கிறது… ரஜினியின் நடிப்பும் ஆக்ஷனும் ஸ்டைலும் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. விஜய் சேதுபதியும், நவாஸுதீனும் ரஜினிக்கு போட்டியாக வேற லெவல் பெர்பார்மன்ஸை கொடுத்துள்ள னர்

படத்தில் வில்லனாக வரும் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் ஆகியோர் தங்களது நடிப்பை சிறப்பாக செய்துள்ளனர். சசிகுமார் ரஜினியின் நண்பனாக மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார்.

ரஜினியின் ஜோடியாக வரும் சிம்ரன், திரிஷா  ஆகிய இருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருகிகாறர்கள்…. சிம்ரனின் கொஞ்சும் அழகு ரசிகர்களை கிரங்க வைக்கிறது. மற்றும் மாளவிகா, மேகா ஆகாஷ் முனிஸ்காந்த், நரேன், ராமசந்திரன் உள்ளிட்ட மற்ற அனைத்து தரப்பினரும் தங்களது பணியை சிறப்பாக  செய்துள்ளார்கள்.

ஹாஸ்டல்  முதல் கல்லூரியில் நடக்கும் ரேகிங் வரை பல்வேறு விஷயங்களை தட்டிக் கேட்கும் ரஜினி,  மாணவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவததை ரசிக்கலாம்.. அதுபோல  சிம்ரனுடன் நடித்துள்ள ரொமான்டிக்  சீன்களும்  வெகுவாச ரசிக்க வைக்கிறது… அதிலும்… மழைத்தூறலின் போது  சைக்கிளில் வலம் வரும் ரஜினி… இதுருவரை  பார்க்காத ஒரு ரஜினி…

படம் கொஞ்சம் நீளம்தான்… ஆனால், படத்தில்  ரஜினியின் பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், அனைதும் பழைய ரஜினியை மீண்டும் கண்முன் கொண்டு வருகிறது…

எப்போதும்போல சில வசனங்கள் அவரது அரசியல் ஆட்டத்துக்கு முன்னோட்டமாக இருப்பதாக நினைத்துக்கொள்ளலாம்.. (அவர் அரசியலுக்கு வருவாரா என்பது கேள்விக்குறி) இத்தனை வருஷம் பொறுத்தாச்சு இனிமே நாம பாய வேண்டிய நேரம் என பேசி அவரது ரசிகர்களிடம் உசுப்பேத்தி உள்ளார்…

அனிருத் இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும்…. தியேட்டரை விட்டு வெளியே வந்ததும்  படத்தின் பாடல் வரிகள்… இசையமைப்பு அனைத்தும் நம்மை விட்டு விலகி விடுகிறது….. எதிர்பார்த்த அளவு இல்லை… இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகராக அவரது பணியை செய்திருக்கிறார்.

ரஜிடனி வார்னாக வரும் முதல் பாதி விறுவிறுப்பாக செல்லும் அளவுக்கு பின்பாதி இல்லை… ரசிகர்கள் கொட்டாவி விடுகிறார்கள்…

மொத்தத்தில் ரஜினியின் `பேட்ட´   படம்…. ரஜினி ரசிகர்களுக்கானது… அவரது இளம் ரசிகர்கள் மட்டுமல்லாது  நடுத்தர வயது ரசிகர்களும் ரசிக்கும் படம்….. அனைத்து தரப்பினரும் ஒரு தடவை படத்தை ரசிக்கலாம்….

கார்ட்டூன் கேலரி