“எனது காட்சிகள் முழுதாக முடிந்தது” :  ‘பேட்ட’ ரஜினி ட்விட்

பேட்ட படத்தின் தனக்கான படப்பிடிப்பு காட்சிகள் முடிந்தது என ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் பேட்ட.  இப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இரு வேறு தோற்றத்தில் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது.

இந்நிலையில்& பேட்ட படத்தின் தனக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தது என தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பதிவிட்டுள்ளார். மேலும் தீர்மானிக்கப்பட்டதற்கு 15 நாள் முன்னதாகவே தான் சம்பந்தப்பட்ட காட்சிகள்  முடித்ததில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளையும் பதிவிட்டுள்ளார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: "எனது காட்சிகள் முழுதாக முடிந்தது” :  ‘பேட்ட’ ரஜினி ட்விட், petta-shooting-is-over-rajinikanth-tweet
-=-