வசனமில்லா பேட்ட டீசர் இன்று வெளியீடு

சென்னை

ஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள பேட்ட படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்ட ஒரு நட்சத்திர கூட்டமே உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

வரும் பொங்கல் அன்று வெளிவர உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று வெளியானது. இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒட்டி பேட்ட படத்தின் டீசரை தயாரிப்பு குழுவினர் இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் வசனமே கிடையாது. ரஜினிகாந்த் நடந்து செல்வது, ஆடுவது உள்ளிட்ட காட்சிகள் மட்டுமே உள்ளன. அத்துடன் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்வதும் இறுதியில் ரஜினியின் வழக்கமான சிரிப்பும் இடம் பெற்றுள்ளது.

கார்ட்டூன் கேலரி