சென்னை:

த்திய மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்துவரும் ஊழியர்களுக்கு, தாங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து  சிறு அளவிலான பணம், வருங்கால வைப்பு நிதிக்காக பிடிக்கப்படுவது வழக்கம்.

இந்த பணம் ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங்கப்படும். இந்நிலையில், இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ள பணத்தை ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே முடித்து, பணத்த பெற அனுமதிக்க வகை செய்யும் வகையில் புதிய பரிந்துரை மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவச் செலவு, உயர்கல்வி போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி காப்பீடு கணக்கை, 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முடிக்க அனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

இந்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்துள்ள  நிதித்துறை மசோதா-2018ல் இந்த பரிந்துரை இடம் பெற்றுள்ளது.

பிஎப். தொகையை பெற விரும்பும் வாடிக்கையாளர், கடுமையான சட்டத்திட்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலையை மாற்றவே இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.