வாஷிங்டன்

ஃபிசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவின் முதல் ஒப்புதலைப் பெறலாம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்

உலக மக்களை பெருமளவில் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இவற்றில் பல தடுப்பூசிகள் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளன.

ரஷ்யா ஏற்கனவே தடுப்பூசி கண்டறிந்ததாக அறிவித்த போதிலும் விஞ்ஞானிகள்  அது குறித்து சந்தேகங்கள் எழுப்பி உள்ளனர்.

அமெரிக்காவில் ஃபிசர் நிறுவனம் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கண்டறிந்துள்ள தடுப்பூசிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம் செய்தியாளர்களிடம்,

“ஃபிசர் நிறுவனம் நன்கு செயல்படுவதால் அந்த நிறுவனம் முதல் ஒப்புதலைப் பெறக்கூடும்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் நன்கு செயல்பட்டாலும் அது இரண்டாவதாக ஒப்புதல் பெறும் எனத் தோன்றுகிறது”

எனத் தெரிவித்துள்ளார்.