வாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் நாட்டில், மொத்தம் 12 லட்சம் பேர், இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவத்திற்கான நியூ இங்கிலாந்து ஜர்னலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பு மருந்து, தொற்றுக்கு எதிரான வலிமைவாய்ந்த பாதுகாப்பை தருகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதார்த்த உலக பயன்பாட்டின் அடிப்படையில், ஒரு கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆதாரப்பூர்வ விரிவான ஆய்வு இதுவாகும் என்று கூறப்பட்டுள்ளது.