ஜெர்மன்:
மெரிக்க-ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை திறமையாக கட்டுப்படுத்துவதாக அறிவிப்பை வெளியிட்ட பிப்சர் நிறுவனம், இது மனித குலத்திற்கு மிகவும் முக்கியமான நாள் என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிப்சர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகித வெற்றி அடைந்து விட்டதாக அறிவித்துள்ள பிப்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், இதன் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் கட்ட சோதனையில் உள்ள இந்த தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க-ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை திறமையாக கட்டுப்படுத்துவதாக அறிவிப்பை வெளியிட்ட பிப்சர் நிறுவனம், இது மனித குலத்திற்கு மிகவும் முக்கியமான நாள் என குறிப்பிட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் பங்கேற்ற ஆயிரக்கணக்காணவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. 3ம் கட்ட பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

மேலும், எல்லாம் திட்டமிட்டப்படி தொடர்ந்தால், 2020 ஆம் ஆண்டிற்குள் 5 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் என்றும், 2021 ஆம் ஆண்டில், 130 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, மக்களை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது

இது வரை 5 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாதொற்று காரணமாக இதுவரை 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன. இந்தியா உட்பட ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.