பைசர் மற்றும் பயோ-என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் செயல்படும் என்று கண்டுபிடித்துள்ளது.

ஆய்வகத்தில் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 நபர்களை கொண்டு பரிசோதனை நடத்தியதில் இந்த மருந்து உருமாறிய கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றியதாக தெரிவித்துள்ளனர்.

N501Y என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா குறித்து பலரும் கவலை தெரிவித்து வரும் நிலையில், விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்த ஆய்வு – ஃபைசர் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழக மருத்துவக் கிளையின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது.